anglanc9
ஒரு ஜபணி கதை ஜபணி கதை ஒரு ஊரில் ஒரு கிழவன் கிழவி இருந்தார்கள். ஒரு நாள் அவள் ஆற்றுக்கு போனார்கள். அங்கே துணி துவைத்த போது ஆற்றில் ஒரு பெரிய குழிப்பேரியை பார்த்தாள். அவளுக்கு இதை சாப்பிட ஆசை வந்ததால் குழிப்பேரியை பிடித்து விட்டுக்கு கொண்டு வந்தாள். விட்டில் அவளுடைய கணவன் பழத்தை வெட்ட ஆரம்பித்த போது இதுக்குள்ளே சின்ன பையனை பார்த்தான். நான் சொர்க்கத்திலிருந்து உங்களுடைய மகனாக வந்தேன் என்று பையன் சொன்னான். கிழவங்களுக்கு குழந்தைகள் இல்லாததால் அவங்களுக்கு ஒரே சந்தோஷம் வந்தது. பையன் குழிபேரியிலிருந்து வந்ததால் அவன் பெயர் மொமொதரோ. மோமோ என்று தமிழில் குழிப்பேரி. தரோ என்று பையன். சில வருஷங்களுக்கு அப்புறம் மொமொதரோ ' அப்பா அம்மா நான் பேய்களோடு போருக்கு போகணும்' என்று சொன்னான். கிழவன்கள் ரொம்ப கவலை பட்டர்கள் அனால் பையன் விட்டான். ஜப்பானில் இங்கேஅங்கெ சுற்ற போது பேய்களை கொன்று கொண்டு இருந்தான். கொஞ்ச நேரம் அப்புறம் பெரிய பணக்குவியலை கொண்டு விட்டுக்கு திரும்ப வந்தான். எல்லோரும் சந்தோஷமாக வாழ்த்து கொண்டு இருந்தார்கள்.
Jun 5, 2014 8:31 PM
Corrections · 1
1

ஒரு ஜப்பானிய கதை

ஜப்பானிய கதை

ஒரு ஊரில் ஒரு முதிய தம்பதியரான கிழவன் கிழவி வாழ்ந்து வந்தார்கள். ஒரு நாள் அவர்கள் ஆற்றிற்க்கு சென்றனர். அங்கே துணி துவைத்த போது ஆற்றில் ஒரு பெரிய குழிப்பேரியை கண்டார்கள். அவர்களுக்கு அதை சாப்பிட ஆசை வந்ததால் குழிப்பேரியை வீட்டுக்கு எடுத்து கொண்டு வந்தார்கள். வீட்டில் அவளுடைய கணவன் பழத்தை வெட்ட ஆரம்பித்த போது அதற்குள்ளே சின்ன பையனை பார்த்தான். நான் சொர்க்கத்திலிருந்து உங்களுடைய மகனாக வந்தேன் என்று பையன் சொன்னான். அம்முதிய தம்பதியர்க்கு குழந்தைகள் இல்லாததால் அவர்களுக்கு ஒரே மகிழ்ச்சியாக இருந்தது. பையன் குழிப்பேரியிலிருந்து வந்ததால் அவன் பெயர் மொமொதரோ. மோமோ என்றால் தமிழில் குழிப்பேரி. தரோ என்றால் பையன்.

சில வருடங்களுக்கு பிறகு மொமொதரோ ' அப்பா அம்மா நான் பேய்களோடு போருக்கு போகணும்' என்று சொன்னான்.  அதை கேட்ட முதிய தம்பதியர் மிகவும் வருந்தினர் .எனினும் அவன் சென்றுவிட்டான். ஜப்பான் முழுவதும் இங்கும்அங்குமாக சுற்றி பேய்களை கொன்று கொண்டு இருந்தான். சிறிது நாட்களுக்கு பிறகு பெரிய பணக்குவியலை கொண்டு வீட்டுக்கு திரும்ப வந்தான். அனைவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.

June 24, 2014
Want to progress faster?
Join this learning community and try out free exercises!